சேலம், ஆக.12: சேலம் கல்பாரப்பட்டி பள்ளக்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் கடந்த 25ம் தேதி மனைவியை பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார். துணையாக மணிகண்டன் இருந்தார். அவர் வந்த டூவீலரை சித்தாபிரிவு பகுதியில் நிறுத்தியிருந்தார். 3ம்தேதி அதிகாலை பார்த்தபோது, வண்டியை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்து வந்தனர். இதில் டூவீலரை திருடியதாக களரம்பட்டி புலிகார தெருவை சேர்ந்த சூர்யா(26), தாதகாப்பட்டி செல்லகுட்டிக்காட்டை சேர்ந்த மேகராஜ்கார்த்திக்(29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டுபோன டூவீலரை பறிமுதல் செய்தனர்.



