இடைப்பாடி, டிச. 9: இடைப்பாடி அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சபரிநாதன்(27). இவரும் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகள் சந்தியா(21) என்பவரும், கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் இருந்து வெளியேறிய காதல் ஜோடி, கொங்கணாபுரம் அடுத்த தங்காயூர் புது பழனி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு இடைப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இயைதடுத்து போலீசார், இருவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement


