இடைப்பாடி, டிச. 9: இடைப்பாடி அடுத்த தேவூர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க, காவல் துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் 43 இடங்களில் 105 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு திறக்கும் விழா, நேற்று மாலை அண்ணமார் கோயில் சமுதாயக்கூடத்தில், சங்ககிரி டிஎஸ்பி தனசேகரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் மாவட்ட எஸ்பி., கவுதம் கோயல், சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பயிற்சி டிஎஸ்பி துரைகுமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ், செயல் அலுவலர் தம்பிதுரை, சங்ககிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணி, பேரூர் அவைத்தலைவர் அய்யாசாமி, லட்சுமணன், முருகேசன், எஸ்ஐக்கள் அருண்குமார், சின்னண்ணன், விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


