Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

படகு இல்லம் அருகே கார் மீது விழுந்த மரம்

ஏற்காடு, செப். 5: ஏற்காடு படகு இல்லம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது, மரம் வேரோடு விழுந்ததில் கார் சேதமடைந்தது. இதில் சுற்றுலா பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமராஜன். நேற்று தனது காரில், சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஏற்காட்டிற்கு சென்றார். அப்போது, படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டு, காரை அரசு பள்ளியின் அருகேயுள்ள சாலையோரத்தில் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

அப்போது அருகில் இருந்த பெரிய மரம் ஒன்று, திடீரென வேரோடு சரிந்து, டிரைவர் இருந்த காரின் மீது விழுந்ததில், காரின் முன்பகுதி நொறுங்கி பலத்த சேதமடைந்தது. டிரைவர் ராமராஜன் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மரம் விழுந்த போது, அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் தப்பினர். சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியில், மரம் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மின்வாரிய துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சென்று, மரத்தை வெட்டி அகற்றினர். மேலும், மரம் விழுந்ததில் மூன்று மின்கம்பங்கள் உடைந்ததால், 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்கள் உடைந்த மின்கம்பங்களை சரி செய்து, 10 மணி நேரத்திற்கு பிறகு மின் இணைப்பு வழங்கினர்.