Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

மேட்டூர், செப். 5: மேட்டூரிலிருந்து நீதிபுறத்திற்கு, நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. கொளத்தூர் யூனியன் ஆபீஸ் பஸ் நிறுத்தத்தில், தார்காட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண்குமார் (28) என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தத்தில் இறங்கவில்லை. அடுத்த பஸ் நிறுத்தத்தில், அவரை பஸ் நடத்துனர் இறங்க சொல்லவே, பஸ்சில் இருந்து இறங்கிய அருண்குமார், சாலை மறியலில் ஈடுபட்டார்.

அங்கிருந்த பெண்கள், பொது மக்களிடம் ஆபாசமாக பேசி பஸ்சை இயக்கினால் கொலை செய்து விடுவேன் என பஸ் டிரைவரை செல்வத்தை மிரட்டி, பஸ் கண்ணாடியை உடைத்துள்ளார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சரை யாராவது பேசினால் கொன்று விடுவேன் என்றும், தான் டிவிகே என்றும் கூறியுள்ளார். இது குறித்து பஸ் டிரைவர், கொளத்தூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில், கொளத்தூர் சப் இன்ஸ்பெக்டர் உதய பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.