Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல்

ஆத்தூர், செப். 5: ஆத்தூர் நகராட்சிக்கு வாடகை நிலுவை செலுத்தாத கூட்டுறவு பண்டக சாலை உள்பட 10 கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமான 468 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.4 கோடியே 94 லட்சம் வருவாய் ஈட்டப்படுகிறது. பஸ் நிலையம், ராணிப்பேட்டை, கொல்லம்பட்டறை, கடைவீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள நகராட்சி கடைகளுக்கு, பல மாதங்களாக வாடகை நிலுவையாக ரூ.3 கோடியே 23 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கடைவீதி பகுதியில் வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு, நகராட்சி ஆணையாளர்(பொ) ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில், சீல் வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது நகர கூட்டுறவு பண்டக சாலை உட்பட 10 கடைகளுக்கு, வாடகை நிலுவை பல மாதங்களாக செலுத்தப்படாமல் இருப்பதால், நகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் (பொ)ரவிச்சந்திரன் கூறுகையில், `ஜூலை மாதம் முதல் இதுவரை, நகராட்சி வாடகை செலுத்தாத 68 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட பிறகு, நகராட்சிக்கு இதுவரை 23 லட்சம் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடை உரிமையாளர்கள் சீல் நடவடிக்கையை தவிர்க்க, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை முறையாக கட்ட வேண்டும்,’ என்றார்.