Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மது பதுக்கி விற்பனை செய்த வாலிபர் கைது

கெங்கவல்லி, பிப்.5: ஆத்தூர், காகாபாளையத்தில் மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 184 மதுபாட்டில்களை பயிமுதல் செய்தனர். ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருவதாக மாவட்ட எஸ்பி கவுதம் கோயலுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், எஸ்பி தனிப்படை போலீசார் தலைமையில், ஆத்தூர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர், காகாபாளையம் பகுதியில் அருண்குமார் (37) என்பவர், மது பதுக்கி கள்ளத்தனமாக 151 குவாட்டர், 33 பீர்பாட்டில் வைத்திருந்தார். இதை கண்ட தனிப்படை போலீசார் அவரை பிடித்தனர். தொடர்ந்து அருண்குமாரை ஆத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த டவுன் போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.