கெங்கவல்லி, டிச.3: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது வீட்டில் கடந்த 18.6.2022ம் தேதி, 8 பவுன் தாலிக்கொடி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து, கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராம்குமார்(35) என்பவரை கைது செய்தனர். பின்னர், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த ராம்குமார், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார். கெங்கவல்லி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லையில், திருட்டு வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின்பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்து வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ கணேஷ்குமார் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரிக்கு சென்று ராம்குமாரை கைது செய்தனர். பின்னர், ஆத்தூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உதயச்சந்திரன் முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர். கைதான ராம்குமார் மீது கடலூர், நெல்லிக்குப்பம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தம்மம்பட்டி உள்ளிட்ட 11 ஊர்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

