Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக நுரையீரல் தினம் ஓசோன் தினம் கடைபிடிப்பு

சேலம், அக்.2:உலக நுரையீரல் மற்றும் ஓசோன் தினங்களானது, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நுரையீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, அதனை சார்ந்த நாள்பட்ட நோய்கள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் சார்ந்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும், ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் சுவாச பராமரிப்பு தொழில்நுட்ப பிரிவு மற்றும் பூமி அமைப்பின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்வினை முன்னிட்டு, நுரையீரல் பாதிப்பு சார்ந்த விழிப்புணர்வு மவுன மொழி நாடகமும் ஓசோன் தினம் சார்ந்த மாதிரி வடிவமைப்பு மற்றும் ஐடியேத்தான் போட்டியும் நடத்தப்பட்டுபரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை பிரணவ் மற்றும் உதவி பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.