Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் காசநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

மேட்டூர், அக்.2: ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சார்பில், காசநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட்டது. மேச்சேரி பொட்டனேரியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம், மேச்சேரி வட்டாரத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஆலையின் தலைவர் குமார் தலைமை வகித்தார்.

மனிதவளத்துறை தலைவர் ஹரிராஜ் மற்றும் தெற்கு மண்டல சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பெத்தண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள், காசநோய் துணை இயக்குனர் கணபதி ஆகியோர் பேசினர். மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள் பேசும் பொழுது, காச நோயாளிகளின் சிகிச்சை காலத்தில் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகவும் அவசியமானது. காசநோயை கட்டுப்படுத்த தொடர்ந்து சிகிச்சை பெற்று, மருத்துவர் ஆலோசனைகளை பின்பற்றுதல் மற்றும் சத்தான உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கியமானது என்று குறிப்பிட்டார்.