Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வீரபாண்டி ராஜா 5ம் ஆண்டு நினைவுநாள் ரத்ததான முகாம்

சேலம், அக்.2: சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளருமான மறைந்த வீரபாண்டி ராஜாவின் 5ம் ஆண்டு நினைவுதினம் இன்று (2ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது. திமுக கல்வியாளர் அணி மாநில இணை செயலாளர் மலர்விழி வீரபாண்டி ராஜா ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், 75க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் குகை ரமேஷ், சேலத்துசிங்கம் வீரபாண்டியார் நற்பணி மன்றத்தை சேர்ந்த பனமரத்துப்பட்டி ஸ்ரீதர், வேலு, மார்க்கெட் ரமேஷ், குட்டிப்பிரகாஷ், ஜவகர், மனோ, ரவி, வெங்கடேஷ், லயன்மேடு சதாம், முத்துசெல்வன், தாதை கார்த்தி, வின்சென்ட் நாகா, மகுடஞ்சாவடி கதிரவன், சந்திரமோகன், காந்தி, திராவிடன் அசோக், முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீரபாண்டியார் நற்பணி மன்றத்தின் சார்பில் 24வது ஆண்டாக இந்த ரத்ததான முகாம் நடந்தது.