Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்

சேலம், மே 1: சேலம் இரும்பாலை முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (34). இவருக்கு திருமணமாகி விவேகா (25) என்ற மனைவியும், கோபிகிருஷ்ணன் (4) என்ற குழந்தையும் உள்ளனர். விவேகா அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 27ம் தேதி சம்பளம் வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காரிப்பட்டி அடுத்த செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகள் கபிலா (19), அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு. இவரது மகள் பிரியங்கா (19), தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்த போதும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.