Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேலத்தில் 102.6 டிகிரி வெயில்

சேலம், மே 1: தமிழகத்தில் வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் முதல் வாரம் வரை கோடை காலமாக கருதப்படும். இந்த காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். ஆனால் நடப்பாண்டில் மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் 99.5 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 102.6 டிகிரி பதிவாகியுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் 2 டிகிரி வரை அதிகமாக வெயில் கொளுத்தும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “சேலம் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது. இந்த நேரத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதால், தோல் நோய்கள் பாதிப்பு ஏற்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெயில் நேரங்களில் வெளியில் அனுப்பக் கூடாது. குழந்தைகளுக்கு இளநீர், நுங்கு, மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழ வகைகள் போன்ற இயற்கை உணவுகளை கொடுக்க வேண்டும். கெமிக்கல் கலந்த குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். அதிக வியர்க்குரு பாதிப்பு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்,’’ என்றனர்.