Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முன்விரோத தகராறில் தாக்கிய வாலிபர் கைது

வாழப்பாடி, ஜன.1: வாழப்பாடி அருகே, சிங்கிபுரம் கிழக்கு வீதியில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி ரஞ்சித் (35). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (40). இவர்களுக்கிடையே நிலப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி, அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் முருகேசன், அவரது மகன் தினேஷ் (28) ஆகியோர் சேர்ந்து, ரஞ்சித்தை தாக்கினர். இதில் காயமடைந்த அவர், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வாழப்பாடி போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தினேஷை கைது

செய்தனர்.