சேலம், அக்.28: சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் (30). இவரை தீவட்டிபட்டி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்திருந்தனர். மேலும், சேலம் மாவட்டத்தில் 11 வழக்குகளில் திருடுபோன சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜய் மீது சேலம் மாவட்டத்தில் 11 திருட்டு வழக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 6 திருட்டு வழக்குகளும், தர்மபுரி மாவட்டத்தில் 2 கொள்ளை வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 2 திருட்டு வழக்குகளும், சேலம் மாநகரில் ஒரு கொள்ளை முயற்சி வழக்கு என மொத்தம் 22 வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற சேலம் கலெக்டர் இளம்பகவத் விஜயை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.


