அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 1.55 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம்; 31ம் தேதி வரை வழங்கப்படுகிறது..!
சேலம், அக்.28: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 1.55 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ- திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6 மாதங்கள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவ மருந்து கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு தேவையான முக்கிய நுண்ணூட்டச் சத்தாக வைட்டமின்- ஏ விளங்குகிறது. 6 மாதம் முதல் 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1மில்லி என்ற அளவிலும், 1வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2மில்லி அளவிலும் இந்த திரவம் வழங்கப்படுகிறது. 6மாதத்திற்கு ஒரு முறை இந்த திரவம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 25ம் தேதி முதல் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் பணி தொடங்கியது. வரும் 31ம்ேததி வரை வழங்கப்படுகிறது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 6 மாதத்திற்கு ஒரு முறை வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 2வது முறையாக கடந்த 25ம் தேதி முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1.55 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. வரும் 31ம் தேதி வரை, வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 1.55 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் மட்டும் 40 ஆயிரம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மாநகரம், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்படுகிறது. இந்த திரவம் வழங்கப்படுவதால் குழந்தைகளின் எலும்புகள் அடர்த்தியாகும். பார்வை கூர்மையாகும். சரும பிரச்னைகள் தீரும். இதை உணர்ந்து அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க முன்வரவேண்டும். குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இந்த திரவத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது,’’ என்றனர்.


