Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண் கடத்திய டிப்பர் லாரி பொக்லைன் பறிமுதல்

தாரமங்கலம், ஜூன் 16: தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல், குயவனூர் பகுதியில் அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் நேற்று முன்தினம் இரவு, சிலர் மண் கடத்தலில் ஈடுபடுவதாக, செம்மண்கூடல் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த்பாபுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, பொக்லைன் மூலம் டிப்பர் லாரியில் மண் அள்ளி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, அவர் தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்து புகாரளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.