சேலம், நவ.3: சேலம் அருகே அனுமதி பெறாத இடத்தில், பட்டாசு தயாரிக்க வைத்திருந்த வெடி மருந்துகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், குப்பனூர் பகுதியில் அனுமதி பெறாமல் பட்டாசு தயாரிக்கப்படுவதாக, வருவாய் துறையினருக்கு ததகவல் கிடைத்தது. இதையடுத்து குப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் அப்பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குப்பனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அருகே, அனுமதி பெறாத இடத்தில் பட்டாசு தயாரிக்க ெவடி மருந்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சுக்கம்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ெஜயகுமார்(51) என்பவர், வெடி மருந்தை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த கரி மருந்து 5 கிலோ, 6000 குச்சிகள், பட்டாசு தயாரிக்க வைத்திருந்த காக்கி பேப்பர் அட்டை 8 பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய் துறையினர், இதனை காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார், ஜெயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


