Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

55 பதக்கம் பெற்று சேலம் 4வது இடம்

சேலம், அக்.30: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகிய 5 பிரிவின் கீழ் 26 லட்சத்து 38 ஆயிரத்து 174 பேர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து மாவட்ட, மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வௌிப்படுத்தினர். மண்டல அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற வீரர்கள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர்.

மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகளை பொறுத்தவரை, நாமக்கல், சென்னை, மதுரை, திருச்சி, அரியலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்தது. இப்போட்டிகள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் மாவட்டம் 15 தங்கம், 13 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்கள் பெற்று மாநில அளவில் 4ம் இடம் பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் 5 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 20 பதக்கங்கள் பெற்று 17வது இடமும், கிருஷ்ணகிரி மாவட்டம் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்கள் பெற்று 21வது இடமும், தர்மபுரி மாவட்டம் 2 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் பெற்று 28வது இடமும் பிடித்துள்ளன.