Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரசு பள்ளி, விளைநிலங்களை சூழ்ந்த மழைநீர் ; பொதுமக்கள் சாலை மறியல்

இடைப்பாடி, செப்.30: இடைப்பாடியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பள்ளி, விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. மழையால், கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுப்பள்ளி ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் விளை நிலங்களை சுற்றிலும் குளம்போல மழைநீர் தேங்கியது. மேலும் வீடுகளை சூழ்ந்தும் தண்ணீர் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காவிரி உபரிநீர் விவசாய சங்க மாநில தலைவர் வேலன், பாஜக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், கொங்கணாபுரம் வடக்கு ஒன்றிய பாமக செயலாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், சின்னப்பம்பட்டி-கொங்கணாபுரம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த இடைப்பாடி தாசில்தார் நாகூர் மிராசா, கொங்கணாபுரம் இன்ஸ்பெக்டர் (பொ) பேபி, கொங்கணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் நல்லதம்பி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலந்து சென்றனர். அரை மணிநேரம் நீடித்த மறியலால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.