Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைவாசல் அருகே மாயமான சிறுவன் திருச்சியில் மீட்பு

ஆத்தூர், அக்.29: சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் ஜெயபால்(15). கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்த ஜெயபால், திடீரென்று மாயமானார். அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும், ஜெயபால் சிறுவன் கிடைக்காததால், இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பூர்ணிமா வழக்குபதிவு செய்தார்.

தொடர்ந்து ஆத்தூர் டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின்பேரில், டவுன் இன்ஸ்பெக்டர் சங்கர், தலைவாசல் எஸ்ஐ சிவசக்தி, எஸ்எஸ்ஐ தாதன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று திருச்சியில் சிறுவன் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், திருச்சி பஸ் நிலையத்தில் வேறொரு ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த சிறுவனை மடக்கிப் பிடித்தனர். அங்கிருந்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.