Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மத போதகர் ஜெபக்கூடத்தில் 8வது நாளாக போராட்டம்: புகார் அளிக்க பொருளாதார போலீசார் அழைப்பு

சேலம், செப்.28: சேலம் அம்மாபேட்டையில் ஜெபக்கூடத்தில் நேற்று 8வது நாளாக, பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளார்.

சேலம் அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை நடத்தி வந்தவர் விஜயபானு. இவர் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, பல ஆயிரக்கணக்கானோரிடம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவானார். இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபானு, தோழி ஜெயபிரதா, பாஸ்கர், முகமூத், போதகர் செந்தில்குமார், அவரது மனைவி ஜான்சிராணி கரோலின் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து இதுவரை மொத்தம் நகை, தங்கம், சொத்து என 21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதகர் செந்தில்குமார் நடத்தி வரும் அம்மாபேட்டை ஜெபக்கூடத்தில் நேற்று 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்குமாறும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி வருகின்றனர். அதன்படி, கடந்த 2 நாளில் 30க்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.