Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆத்தரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆத்தூர், ஜூலை 28: ஆத்தூரில் நீதிமன்ற உத்தரவின்படி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். ஆத்தூர் நான்கு ரோடு சந்திப்பு முதல் கடைவீதி வரையும், நான்கு ரோடு சந்திப்பு முதல் புதுப்பேட்டை வரையிலும், சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து கடை அமைத்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆத்தூர் இளநிலை பொறியாளர் சத்தியமூர்த்தி, ஆத்தூர் நகர இன்ஸ்பெக்டர் சங்கர், ஊரக இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் விஜய் புகைப்படம் அச்சிடப்பட்ட பதாகைகளையும் அகற்றினர். மேலும் சாலையோரமிருந்த ஒரு சில மரங்களை அகற்றினர். இதனால் ஆத்தூர் நான்கு ரோடு சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆத்தூர் சாரதா பெட்ரோல் பங்க் முதல் ராணிப்பேட்டை வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் நடக்கிறது.