Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு: எழுது பொருட்கள், பேக் விற்பனை அதிகரிப்பு

சேலம், மே 26: ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தேவையான எழுது பொருட்கள், பேக் உள்ளிட்டவைகளின் விற்பனைஅதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகளும், 366 நடுநிலைப் பள்ளிகளும், 136 உயர்நிலைப்பள்ளிகளும், 159 மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம் 1,771 அரசுப்பள்ளிகளும், 123 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 504 தனியார் சுயநிதி பள்ளிகளும் என 2,398 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பையொட்டி சேலம் கோட்டை, குகை, செவ்வாய்பேட்டை, ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப், புதிய பஸ் ஸ்டாண்ட், சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பேக் விற்பனை களைகட்டியுள்ளது.

அதேபோல் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை நல்ல முறையில் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகளை டைலர்கள் தைத்து வருகின்றனர்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், ஸ்பூன், டிபன் கேரியல் உள்ளிட்டவைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று, மாணவ, மாணவிகள் அமரும் சீட், பக்கவாட்டு கண்ணாடி, ஜன்னல் இரும்பு கிரீல், முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, அவசர வழி, கட்டுப்பாட்டு கருவி, மாணவ, மாணவிகள் எளிதில் ஏறும் வகையில் படிக்கட்டுகள் வடிவமைப்பு, முகப்பு விளக்கு, வாகனம் ஓட்டும் டிரைவரின் லைசென்ஸ், அவரது பார்வை திறன் உள்பட பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.