Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஸ்சில் கணவருடன் வந்த இளம்பெண்ணுக்கு டார்ச்சர்

சேலம், ஜூன் 25: கணவருடன் சேலம் வந்த இளம்பெண்ணுக்கு பஸ்சில் வைத்து தொந்தரவு கொடுத்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் சேலம் பகுதியில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கணவருடன் திருச்சியில் இருந்து சேலத்திற்கு பஸ்சில் வந்தார். இவர்கள் வந்த பஸ்சில் ஒரத்தநாட்டை சேர்ந்த கல்யாணசுந்தரம் (42) என்பவர் பின்இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர், இளம்பெண்ணை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்ததும், அவரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசாரியான அவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.