Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

2,586 போலீசாருக்கு ரூ.1.76 கோடி ஈவுத்தொகை

சேலம், அக்.23: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 2,586 போலீசாருக்கு காவலர் கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.1.76 கோடி ஈவுத்தொகை வழங்கப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு சேலம் எஸ்பி அலுவலகத்தில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இரு மாவட்டங்களிலும் பணியாற்றி வரும் 2,586 போலீசார், உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் பங்குத்தொகையை கொண்டு, கடன் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும், மகாசபை கூட்டம் நடத்தி வரவு, செலவு கணக்கு தாக்கல் செய்து, ஈவுத்தொகையை தீபாவளியோடு ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிரித்து வழங்குகின்றனர். இந்தவகையில் நேற்று, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கூட்டுறவு கடன் சங்கத்தின் மகாசபை கூட்டம் நடந்தது. செயலாட்சியர் செல்வகுமார், செயலர் கந்தசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் வரவு, செலவு கணக்கு விவரம் தாக்கல் செய்யப்பட்டு, நடப்பாண்டின் ஈவுத்தொகையாக ரூ.1.76 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஈவுத்தொகையை 2,586 உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பிரித்து, அவர்களின் வங்கிக்கணக்கில் இன்று (23ம் தேதி) வரவு வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், காவலர்களுக்கான கடன் தொகை ரூ.10 லட்சம் என்றிருப்பதை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க முடிவு செய்து, மகாசபை கூட்டத்தில் தெரிவித்தனர். இதன்மூலம் இனிமேல் காவலர்கள், அதிகபட்சமாக இக்கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.15 லட்சம் கடன் பெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளிக்கு குறிப்பிட்ட ஸ்வீட் கடையில், இனிப்பு, காரம் வாங்கிக் கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனை கொண்டு, ஒவ்வொரு உறுப்பினரும் அக்கடையில் இனிப்பு, காரம் வாங்கிக் கொள்வார்கள். நடப்பாண்டு எந்த கடையில் அந்த இனிப்பு, காரம் வாங்கிக் கொள்ளலாம் என்பதை மகாசபை கூட்டத்தில் முடிவெடுக்கவில்லை. அதுகுறித்த தகவல் பிறகு தெரிவிக்கப்படும் எனக்கூறியுள்ளனர்.