Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடைகளுக்கு ஹான்ஸ் சப்ளை மளிகை கடைக்காரர் கைது: 230 கிலோ பறிமுதல்

சேலம், ஜூலை 21: சேலம் மாநகர் முழுவதும் கஞ்சா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழித்திடும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வீராணம் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் எஸ்.ஐ. மோகன் முத்துராமன், ஏட்டுக்கள் சரவணன், குணசீலன் கொண்ட தனிப்படையினர் நேற்று வலசையூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் டூவீலரில் வந்த ஒருவர் தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் ஜெயராஜ்(37) என்பதும், கருமந்துறை கரியகோயிலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரது டூவீலரில் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது, உள்ளே ஹான்ஸ் உள்ளிட்ட போதை புலையிலை பொருட்கள் இருந்தது.

தொடர் விசாரணையில், செவ்வாய்பேட்டையில் இருந்து உச்வீர் என்பவர், ஹான்ஸ் பொருட்களை கொடுத்ததாகவும், சுக்கம்பட்டியில் உள்ள முட்புதரில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஜெயராஜிடம் இருந்து மொத்தம் 230 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. கருமந்துறையில் மளிகை கடை நடத்தி வரும் ஜெயராஜ், ஹான்சை விற்பனை செய்வதுடன், சேலத்தில் இருந்து கருமந்துறை செல்லும் வரை உள்ள ஏராளமான கடைகளுக்கு ஹான்ஸ் சப்ளை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.