Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை கொண்டு வர நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்ப்பால் போலீஸ் குவிப்பு

இடைப்பாடி, ஜூன் 19: இடைப்பாடி அருகே, கொங்கணாபுரம் ஒன்றியம், கோணசமுத்திரம் ஊராட்சி கன்னியாம்பட்டியில் சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக, கடந்தாண்டு கோயில் நிர்வாகிகளுக்கும், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கன்னியாம்பட்டியைச் சேர்ந்த மணி (65) என்பவர், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயிலில் உள்ள சிலைகள், நகைகள், பணம் மற்றும் இதர சொத்துக்களை கணக்கீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.