Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மேட்டூர் அணை மதகுகளில் தீபங்கள் ஏற்றி வைப்பு

மேட்டூர், செப்.18: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை சேவா சங்கல்ப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளான நேற்று, ஸ்டான்லி நீர்த்தேக்க வளாகத்தில் (மேட்டூர் அணையில்) தீபம் ஏற்றப்பட்டது. மேல்மட்ட மதகுகள், கீழ்மட்ட மதகுகள் மற்றும் உபரிநீர் போக்கியான 16 மதகுகளுக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. அணைகள் பாதுகாப்பு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றில், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை வௌிப்படுத்த தீபம் ஏற்றப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.