சேலம், ஆக.18: காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தான ‘அன்பான அணுகுமுறை’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் போலீசாருக்கான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி சேலம் போலீசாருக்கான பயிற்சி முகாம் கொண்டலாம்பட்டி தனியார் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘போலீசாருக்கு பல்வேறு வகைகளில் டென்ஷன், பிரஷர் இருக்க தான் செய்யும். வேலைக்கு வரும்போது அதை எல்லாவற்றையும் மறந்து விட்டு தான் பணியாற்ற வேண்டும். நம்மை தேடி பொதுமக்கள் வருகிறார்கள் என்றால் அவர்களின் பிரச்னையை நாம் தீர்த்து வைப்போம் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். அவர்களை அமர வைத்து அவர்களின் குறைகளை அன்போடு கேட்க வேண்டும். கோபத்தை வெளிகாட்டாமல் அவர்களிடம் அனுசரணையாக நடக்க வேண்டும். இதுதான் நமது வாழ்க்கை என்றார்.
+
Advertisement



