Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இடைப்பாடி அருகே கற்கள் கடத்திய 2 லாரி பறிமுதல்

இடைப்பாடி, அக்.17: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், குருமம்பட்டி கிராமம் பவர் ஆபீஸ் அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கோபி, நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்த முயன்ற போது, டிரைவர் லாரியை தூரத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பினார். பின்னர், அதிகாரிகள் லாரியில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், உரிய அனுமதியின்றி கற்கள் கடத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, 2 லாரிகளை பறிமுதல் செய்து கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்து புகார் மனு அளித்தார். இது குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.