Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூருவில் இருந்து கண்ணூர் தூத்துக்குடிக்கு 2 சிறப்பு ரயில்கள்: சேலம் வழியே இன்று செல்கிறது

சேலம், அக்.17: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூருவில் இருந்து சேலம் வழியே கண்ணூர், தூத்துக்குடிக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. விஜயதசமி உள்ளிட்ட பண்டிகை காலத்தையொட்டி முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்கள், நிரம்பிச் செல்கிறது. இதனால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இந்தவகையில் பெங்களூருவில் இருந்து கண்ணூர் மற்றும் தூத்துக்குடிக்கு சேலம் வழியே 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கண்டோன்மெண்ட்-தூத்துக்குடி சிறப்பு ரயில் (06533) நேற்று, பெங்களூருவில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, ஓசூர், தர்மபுரி வழியே சேலத்திற்கு இன்று (17ம் தேதி) அதிகாலை 3.20 மணிக்கு வந்து, நாமக்கல்லுக்கு அதிகாலை 4.28க்கும், கரூருக்கு அதிகாலை 5.18க்கும் சென்று, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியே தூத்துக்குடிக்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடி-பெங்களூரு கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில் (06534) இன்று (17ம் தேதி), இயக்கப்படுகிறது. தூத்துக்குடியில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, நாமக்கல்லுக்கு இரவு 8.43க்கும், சேலத்திற்கு இரவு 9.45க்கும் வந்து பெங்களூருக்கு நாளை அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், எஸ்எம்விடி பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரயில் (06545) இன்று (17ம் தேதி), இயக்கப்படுகிறது. பெங்களூருவில் அதிகாலை 12.05 மணிக்கு புறப்பட்டு, பங்காருபேட்டை, குப்பம் வழியே சேலத்திற்கு அதிகாலை 5.07க்கு வந்து, ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி வழியே கண்ணூருக்கு மதியம் 2மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கண்ணூர்-எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் (06546) இன்று, கண்ணூரில் மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.17 மணிக்கு வந்து, பெங்களூருக்கு காலை 9.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் சேவைகளை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.