Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலத்தில் கிரிப்டோ கரன்சி எக்சேஞ்சரின் ஆபீசில் புகுந்து ரூ.5 லட்சம் பறிப்பு: 5 ரவுடிகள் அதிரடி கைது

சேலம், செப்.17: சேலத்தில் கிரிப்டோ கரன்சி எக்சேஞ்சரின் ஆபீசுக்குள் புகுந்து ரூ.5லட்சத்தை பறித்து சென்றதாக 5 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுதம் (28). ரியல் எஸ்டேட் சைட் இன்சார்ஜ்சாக வேலை செய்து வருகிறார். அதேபோல கிரிப்டோ காயின் எக்சேஞ்சராகவும் இருக்கிறார். சாமிநாதபுரத்தில் உள்ள இவரது அலுவலகத்திற்கு வந்த தேவா என்பவர், யுஎஸ் டாலர் கொடுத்துள்ளார். இதற்கு மாற்றாக ரூ.5 லட்சம் வழங்க, ஏடிஎம்மில் பணத்தை எடுத்து தருவதாக தேவாவை கவுதம் அழைத்து சென்றுள்ளார். பின்னர் இந்த பணத்தை எடுத்த கவுதம், அதை பையில் போட்டுக்கொண்டு தனது அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ரவுடிகளான மணக்காடு அன்புநகரை சேர்ந்த குணா (எ) குணசேகரன் (32), மணக்காடு மேற்கு விநாயகர் தெருவை சேர்ந்த பாலு (எ) பாலகிருஷ்ணன் (42), ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (44), கோர்ட்ரோடு பிள்ளையார்நகர் பரத்குமார் (31), கோரிமேடு ஜல்லிக்காட்டை சேர்ந்த தினேஷ்குமார் (24) ஆகியோர் பையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை எடுத்துகொண்டு ஓடிவிட்டதாக, பள்ளப்பட்டி போலீசில் கவுதம் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவுடிகள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.