சேலம், செப்.17: சேலம் சாமிநாதபுரம் இபி ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் சிவசக்திமுருகன் (48). ஓமலூரில் டைலரிங் கடை வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக கன்னங்குறிச்சி மோட்டாங்குறிச்சி ரேசன் கடை அருகில் வந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். சிவசக்திமுருகன் சத்தம் போடவே அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியது கன்னங்குறிச்சி நடராஜன் தெருவை சேர்ந்த ரவுடி விஜய் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement


