Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேலம் மாவட்ட 108 ஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணிக்கு நேர்காணல்: 19ம் தேதி நடக்கிறது

சேலம், ஜூன் 16: சேலம் மாவட்ட 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வரும் 19ம் தேதி நடக்கிறது. டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து, ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

டிரைவருக்கு மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். தகுதியுடைய ஆண், பெண் இருபாலரும் தங்களுடைய கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்மந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 10 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பணியில் சேர்க்கப்படுவார்கள். அதேபோல், மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும் அல்லது பிஎஸ்சி லைப் சயின்ஸ் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பை பொறுத்தரை, 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,320 வழங்கப்படும். மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி மற்றும் மனிதவளத்துறை நேர்காணல் நடைபெறும். முகாமில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 89259-40959 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.