Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சேலம் காந்தி ஸ்டேடியத்தில் குடியரசு தின தடகள போட்டி

சேலம், அக்.15: தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2026-27ம் கல்வி ஆண்டிற்கான சேலம் வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி காந்தி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் தொடங்கி வைத்தார். இதில் சேலம் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 1490 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 12, 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக 100, 400, 800, 1500, 3000 மீட்டர் தூர ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஷாட்பூட், போல்ட்வால்ட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய மாணவர்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அதேபோல், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.