Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தகவல்களை செயலிகளில் அறியலாம்: புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சேலம், அக்.15: சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான தகவல்களை அதற்கான செயலிகள் மூலம் அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்கள் வௌியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது ஆங்காங்ேக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று (14ம்தேதி) முதல் 3நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான தகவல்களை சேர்ஷாட் மற்றும் டிஎன் அலர்ட் ஆப் ஆகிய செயலிகளின் மூலம் பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொள்வதுடன், மழை வெள்ள புகார்களையும் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெறவும், தமிழ்நாடு அரசு சேசட் மற்றும் டிஎன் அலர்ட் ஆப்களை உருவாக்கியுள்ளது. இதனை பிளே ஸ்டோரில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் தற்போதைய வானிலை முன்னறிவிப்பு, இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை போன்ற பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில் பொதுமக்கள் இயற்கை பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதிகளும் உள்ளது.மேலும், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், அறை எண். 120 மற்றும் 121ல் மாவட்ட அவசரகால நடவடிக்கை மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடர் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களையும், புகார்களையும் இதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077, தரைவழி தொலைபேசி எண்.0427-2452202 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை

பருவமழைக் காலத்தை பாதிப்பின்றி கடப்பதற்காக சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான பணிகளுக்கு மாநகராட்சி மைய அலுவலகம் 0427-2212844, சூரமங்கலம் மண்டலம் 0427-2387514, அஸ்தம்பட்டி மண்டலம் 0427 -2310095, அம்மாபேட்டை மண்டலம் 0427 -2250300, கொண்டலாம்பட்டி மண்டலம் 0427-2461313 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். சேலம் மாநகராட்சி மைய அலுவலக வாட்சப் 83003-83003 என்ற எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம்.