சேலம், அக்.14: சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் எஸ்ஐ தமிழ்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பி.நாட்டாமங்கலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள், கொண்டலாம்பட்டி சீத்தமரக்காடு தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (25), சின்ன ஜாகீர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (26) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ், ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.1.35 லட்சம் மதிப்பிலான 2.7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


