சேலம், அக்.14: இடைப்பாடியை சேர்ந்தவர் 45 வயதான விவசாயி. இவரது செல்போனுக்கு வந்த தகவலில், தனியார் நிறுவனம் ஒன்றில் வினியோகஸ்தராக செயல்பட தொடர்பு கொள்ளுமாறு ஒரு செல்போன் எண்ணை கொடுத்திருந்தனர். இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, ஒரு ஆண்டுக்கான டீலருக்கு ரூ.25ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரூ.25ஆயிரத்தை விவசாயி அனுப்பினார்.
பின்னர் 5 ஆண்டிற்கான தொகையான ரூ.1 லட்சத்தை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டதால், விவசாயி ரூ.97ஆயிரத்தை அனுப்பினார். அதன்பிறகு எந்த தொடர்பு இல்லாமல் போனது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்த விவசாயி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில் ரூ.1.23 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹேமாவதி விசாரித்து வருகிறார்.


