Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

நரசிங்கபுரம், மே 14: நரசிங்கபுரம் விநாயகபுரம் சந்தைதிடல் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமம், சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அலகு குத்துதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியபடியும், விமான அலகு, ராட்டின அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறுநாள் காலை 9 மணியளவில் மேளதாளம் முழங்க பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு வெள்ளி மற்றும் தங்க கவச அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடைபெறுகிறது.