Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஆத்தூர், செப்.11: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், பைத்தூர் கிராமத்தில் அம்மன் நகர் மற்றும் மாரியம்மன் கோயில் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆழ்துளை கிணறு வறண்டதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுவதால், அவதிக்குள்ளாகி வந்த மக்கள் நேற்று காலி குடங்களுடன் ஆத்தூர் சாலையில் திரண்டனர். பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், பிடிஓ தாமரைச்செல்வி சம்பவ இடம் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆழ்துளை கிணற்றை சீர்செய்து சீரான குடிநீர் சப்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.