Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாநகரில் தீவிர வாகன சோதனை கேரளா பதிவெண் காரில் போதை பொருள் கடத்தல்? வாக்கி, டாக்கியில் எச்சரித்த போலீஸ் கமிஷனர்

சேலம், செப்.11: கேரளா பதிவெண் காரில் போதை பொருள் கடத்தப்படுவதாக வாக்கி, டாக்கியில் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, மாநகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சேலம் மாநகர காவல் ஆணையர் ஜோஷி நிர்மல்குமாருக்கு, நேற்று மாலை கேரளா பதிவெண் கொண்ட கருப்பு கலர் காரில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திக்கொண்டு, சேலம் மாநகரக்குள் வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர காவல் ஆணையர், மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் வாக்கி, டாக்கி மூலம் காரின் எண் மற்றும் நிறத்தை கூறி, உடனடியாக பிடிக்குமாறு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, நேற்று மாலை 6 மணி முதல் மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 10 மணி வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆணையர் அலுவலகத்தில் இருந்து காரை பிடிக்குமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட கார் சேலம் மாநகர பகுதியில் எங்கும் காணப்படவில்லை.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், `சில நாட்களுக்கு முன்பு கேரளா பதிவெண் கொண்ட காரில் போதை பொருட்கள் கடத்தி வருவதாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது சம்பந்தப்பட்ட காரை ேபாலீசார் பிடிக்காமல் தவற விட்டு விட்டனர். அதேபோல் இன்றும் (நேற்றும்) நடந்து விடக்கூடாது என்று காவல் ஆணையர் தொடர்ந்து வாக்கி, டாக்கி மூலம் போலீசாரை எச்சரித்து கொண்டிருந்தார்,’ என்றனர்.