Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிய வீடு இடித்து அகற்றம்

காடையாம்பட்டி, ஜூன் 11: காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, மங்கனூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கதிரடிக்கும் களம் இருந்து வந்தது. அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அடுக்கு மாடி வீடு கட்டி பயன்படுத்தி வந்தார். பல முறை வீட்டை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியும், அவர் மறுத்து விட்டார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலத்தை மீட்க, வீட்டை இடித்து அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து காடையாம்பட்டி வருவாய் துறையினர், பிடிஓ பானுமதி தலைமையில், போலீசார், தீயணைப்பு துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த வீட்டை இடித்து அகற்றினர். வீடு கட்டி இருந்த கந்தசாமி, தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்துக்கு பதிலாக, தனக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை, ஏற்கனவே காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவர் மீது அரசுக்கு எழுதி வைத்துள்ளார். இருந்தும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டிடத்தை இடித்து அகற்றி, நிலத்தை மீட்டுள்ளனர்.