Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

சேலம், அக்.10: சேலம் கோரிமேடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விஏஓ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், பதிவுறு எழுத்தர், முதுநிலை ஆய்வக உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட 46 வகையான பதவிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 574 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் வணிகவியல், கூட்டுறவு மேலாண்மை போன்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிஓஏ சான்றிதழ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை, முதுநிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து சான்றிதழ் பெற்றவர்கள் வரும் நவம்பர் 5ம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வானது அடுத்தாண்டு ஜனவரி 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி வழங்குமாறு வேலைவாய்ப்புத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 14ம் தேதி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இதில் போட்டித்தேர்வில் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அலகு வாரியாக மாதிரி தேர்வுகளும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலை கொண்டு பதிவு செய்யலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 0427-2401750, 63816-30785 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.