Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பேச்சு, கட்டுரை போட்டி

சேலம், அக்.10: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி, சேலம் தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வரும் 13ம் தேதி நடக்கிறது. சேலம் தலைவாசலில் உள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களின் கனவு நாயகன் கலாம் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், நாட்டை கட்டி எழுப்புவதில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், கலாமின் வழியில் கனவில் இருந்து நனவிற்கு என்ற தலைப்பில் கவிதை போட்டியும் நடக்கிறது. இந்த போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

கனவு காணுங்கள், வெற்றி பெறுங்கள் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும், கலாம் கண்ட கனவு இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், இளைஞர்களால் உருவாகும் புதிய இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும் நடக்கிறது. இதில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 மாணவர்கள் பங்கேற்கலாம். கால்நடை ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மைய வளாகத்தில் பேச்சு, கட்டுரை, கவிரை போட்டிகள் வரும் 13ம் தேதி நடைபெறும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வரும் 15ம் தேதி நடைபெறும் இளைஞர் எழுச்சி தினவிழாவில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 96269-92051, 63805-25277 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.