Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அம்ரித் பாரத் திட்டப்பணிகளை கோட்ட மேலாளர் நேரில் ஆய்வு

சேலம், அக்.10: நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும் அம்ரித் பாரத் மறுசீரமைப்பு திட்டப்பணிகளை கோட்ட மேலாளர் பன்னாலால் ஆய்வு செய்தார். சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், போத்தனூர், பொம்மிடி, மேட்டுப்பாளையம் உள்பட 15 ரயில்வே ஸ்டேஷன்களை மறுசீரமைப்பு செய்யும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இவற்றில், சாமல்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், சின்னசேலம், குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்களின் நடந்த அம்ரித் பாரத் ஸ்ேடஷன் பணிகள் நிறைவு பெற்று, அந்த ஸ்டேஷன்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 10 ஸ்டேஷன்களிலும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப்பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் நடந்து முடிந்துள்ளது.

இப்பணிகளை விரைவுப்படுத்தி, விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக இப்பணிகள் நடக்கும் ஸ்டேஷன்களில் கோட்ட மேலாளர் பன்னாலால் தொடர் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளார். இந்தவகையில், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.14 கோடியில் நடந்து வரும் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப்பணிகளை கோட்ட மேலாளர் பன்னாலால் ஆய்வு செய்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயணிகளுக்கான வசதிகளையும், பிளாட்பார்ம் மேம்பாட்டு பணிகளையும் பார்வையிட்டார். ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியை மறுசீரமைப்பு செய்யும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. அதனையும் கோட்ட மேலாளர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அம்ரித் பாரத் திட்டத்தில் நடக்கும் லிப்ட் அமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடம், பயணிகளுக்கான ஓய்வறை உள்ளிட்டவைகளையும் கோட்ட மேலாளர் பார்வையிட்டு, இப்பணிகள் அனைத்தையும் மிக விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகளை நிறைவு செய்து, புதுப்பொலிவு பெற்ற நாமக்கல் ரயில்வே ஸ்டேஷன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.