Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கஞ்சா விற்ற வாலிபர் கைது: 3 கிலோ பறிமுதல்

சேலம், செப்.10: சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மேமாத்தூரைச்சேர்ந்த சரண்ராஜ்(29)என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருந்தது. விற்பனைக்காக வைத்திருந்ததாக சரண்ராஜ் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.