Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வாலிபர் கைது

சேலம், ஜூன் 9: சேலத்தில் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் உடையாப்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சரத்குமார் (37). இவர் கடந்த 2022ம் ஆண்டு திருட்டு வழக்கில் வீராணம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவரை பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து, வீராணம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்.