Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சேலம், மே 9: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து தாலுகாவிலும் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்திற்கு இன்று சனிக்கிழமை அனைத்து தாலுகா அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.

முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைபாடுகள் குறித்த புகார்கள் மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.