ஆத்தூர், அக்.8: கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சிக்குட்பட்ட கூடமலை- நரிப்பாடி சாலையில், புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில், சேலம் கலால் உதவி ஆணையாளர் பாலசுந்தரத்திடம், அப்பகுதியில் டாஸ்மாக் கடையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
அளிக்கப்பட்டது.


